sebelum ini dia kalut sangat nak join.BN,,haaa la kena TKO...allo anne mana boleh percaya ini BN...masa kempen PRK Bkt gantang..ana jemput dia buat ceramah di Matang..masa itu dia ok aje..nampak duit..terus Lompat BN...
sumber
மக்கள் சக்தி கட்சித் தலைவர் நீக்கப்பட்டார்
மலேசிய
மக்கள் சக்திக் கட்சியின் விசாரணைக் குழு, கட்சித் தலைவர் ஆர் எஸ்
தனேந்திரன், தமக்கு எதிராக சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களுக்கு பதில்
தரத் தவறியதைத் தொடர்ந்து அவருடைய கட்சி உறுப்பியத்தை ரத்துச் செய்துள்ளது.
ஷா அலாமில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசாரணைக் குழுக் கூட்டத்திற்கு தனேந்திரன் வரவில்லை.
மத்தியக் குழுவைச் சேர்ந்த 27 உறுப்பினர்களில் 14 பேர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரு மணி நேர விவாதத்திற்குப் பின்னர் அந்த முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய 13 பேரும் கூட்டத்திற்கு வரவில்லை.
அந்த 13 பேரில் அறுவர் எந்தப் பக்கமும் சாயாதவர்கள் என்றும் மற்ற எழுவரும் தலைவருக்கு ஆதரவானவர்கள் என்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் ஏ வேதமூர்த்தி கூறிக் கொண்டார்.
கூட்டம் முடிவடையும் வேளையில் தனேந்திரனின் சகோதரரும் உதவித் தலைவருமான ரமேஷ் கட்சித் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தார்.
தாங்கள் அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்ததை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் இறுதி முடிவை சங்கப் பதிவதிகாரிதான் எடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
பாரிசான் நேசனலுக்கு ஆதரவான மலேசிய மக்கள் சக்திக் கட்சியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கடந்த அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

No comments:
Post a Comment